Sunday, 17 September 2017

பணத்தை கொட்டும் ஆன் லயின் வேலைகள் (online jobs )

ஆன் லைனில் கொட்டி கிடைக்கும் தொழில் வாய்ப்பு
















வெளி நாட்டு ஆன் லயின் ஜாப் கம்பெனி கள் இந்தியர்களுக்கு மட்டும் 2015ல் ரூ 20420 கோடி தந்துள்ளது ..இதற்க்கு சில சான்றாக ஆன் லைனில் கிடைக்கும் வாய்ப்புகளில் சில வற்றை பார்ப்போம்

PTBC - Paid to blog creations
நிறுவனங்கள் தங்களது பொருள் மற்றும் சர்வீஸ் offer விளம்பரங்களை போட்டிருப்பார்கள் ..அதற்க்கு வெப்சைட் களான blogger ,wordpress ஓபன் செய்து இதை அதில் போட வேண்டும் ..இதற்கு உங்களை நன்றாக
கவனிப்பார்கள்




P T C - Paid to click

உங்கள் ஈமெயில் லில் முகவரி மூலம் ரிஜிஸ்டர் செய்து போனால் தினமும் விளம்பரம் போடுவார் .அதை
கிளிக் செய்து ஒரு செகண்ட் பார்க்கணும் அவ்வளவு தான் உங்கள் வேலை ..நம்மை ரிஜிஸ்டர் செய்தவர்கள்
எண்ணிக்கையை காட்டி நிறுவனங்களிடம் விளம்பரம் வாங்கி 10% தான் எடுத்து கொண்டு பணத்தை விளம்பரம் பார்ப்பவர்களுக்கு பிரித்து கொடுத்து விடுவார்கள் .ஒரு வெப்சைட்டில் மொத்தமே 10 நிஸ்மிஷத்திற்குள் வேலை முடிந்து விடும் .தினமும் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கும்

P T C - Paid to sign up
இந்த வெப்சைட் களில் பல நிறுவங்களிடம் பேசி அவர்களது வெப்சைட் வைத்திருப்பர் .எந்த நிறுவனமும்
தங்களின் website களில் ஏராளமானபேர் ரிஜிஸ்டர் ஆக வேண்டும் என்று விரும்புவார்கள் .நாம் இந்த வெப்சைட் களில் சைன் அப் செய்து ரிஜிஸ்டர் ஆக வேண்டும் அவ்வளவு தான் வேலை .இதற்க்கு பணம் வரும்

PT C
இது paid to survey இந்த மாதிரி survey website களில் உங்கள் பெயர் ,உங்கள் படிப்பு ,உங்கள் பிடித்த உடை
உங்களுக்கு பிடித்த உணவு email என கேட்பர் .இதை fill செய்தால் நம் கணக்கில் பணம் வரும் .உங்களிடம்
சர்வே வாங்கிய கம்பெனிகள் உங்களது உணவு மற்றும் உடை விஷயத்தை விற்று மற்ற கார்ப்பொரேட் கம்பெனி களிடம் விற்று காசு வாங்கி விடும்

PTA P - paid to add posting
அதாவது நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தை உங்களிடம் தருவார்கள் ..நீங்கள் சமூக வலைத்தளங்களில் (Facebook ,Twiter ) போன்றவற்றில் போஸ்ட் செய்ய வேண்டும் .அதற்க்கு நன்றாக கவனிப்பார்கள்

Paid to copy paste
நிறுவனங்களின் வெப்சைட் களில் உள்ள முக்கிய விஷயங்களை நீங்கள் copy செய்து மேற்குறியதை போன்று
சமூக வலைத்தளங்களில் போட வேண்டும் ..இதற்க்கு உங்கள் கணக்கில் பணம் வந்து சேரும்

Paid to captcha work
நீங்கள் ஈமெயில் தவறாக type செய்தால் கீழே ஒரு box open ஆகி கீழே உள்ள எழுத்தை இந்த boxil type செய்யுங்கள் என்று வருமே .அப்படி வரும் எழுத்து தான் captcha..இது ஈமெயில் லில் மட்டுமல்ல பல இடங்களில்
பார்த்திருப்பீர்கள் இந்த எழுத்தை நீங்களே type செய்து ஏற்ற வேண்டும்



PTLG - Paid to lead genaration

நிறுவனங்கள் தங்கள் பொருள்களை ad செய்திருப்பார்கள் .அந்த பொருள்களை வாங்கக்கூடிய அல்லது விருப்பம் தெரிவிக்க கூடிய நபர் உங்களுக்கு தெரிந்திருந்தால் அதை அந்த நிறுவனங்களுக்கு தெரிவிக்கவேண்டும் அதற்க்கு பணம் தருவார்கள்

PTAM -Paid to appoinment making

நிறுவனங்கள் தங்கள் பெயருக்குடையவரின் data base தரும் .நீங்கள் அவர்களிடம் பேசி யார் விரும்புகிறார்களோ அவர்களது appoinment வாங்கி நிறுவனங்களுக்கு தர வேண்டும் ..வேலை முடிந்தது பணம்
வந்து விடும்

PTSP -paid to sales promotion

நிறுவனங்கள் தங்கள் பொருட்களை பற்றிய விவரமும் ,appoinment விவரமும் வைத்திருக்கும் நீங்கள் appoinment
தந்தவரிடம் போய் பொருட்களை பற்றி கூறினால் போதும் .sales முடிந்தாலும் முடியாவிட்டாலும் உங்களுக்கு காசு உண்டு

PAM - paid to affliate marketing

நீங்கள் இலவச வெப்சைட்களான blogger ,word press ஓபன் செய்து flipkart snapdeal amazon ஆகிய வெப்சைட் களின் link எடுத்து இதில் போட்டு உங்கள் வெப்சைட் மூலம் சேல்ஸ் நடந்தால் போதும் .நன்றாக சம்பாதிக்கலாம்

PT F - Paid to facebook

பல பேர் தங்கள் facebook இற்கு அதிகம் லைக் ஷேர் விரும்புவார்கள் அவர்களை இதற்கென உள்ள வெப்சைட் அணுகி பணம் பெற்று அவர்களிடம் பதிவு செய்திருந்த நம் facebook ற்கு அவர்களது F B யை அனுப்புவார்கள் .நாம் லைக் அல்லது ஷேர் அவர்கள் சொன்ன படி செய்யணும் .அவர்களது எல்லா status க்கும் நல்ல பணம்
வாங்கப்பட்ட ஸ்டேட்டஸ் மட்டுமே வரும் .பணமும் வந்து விடும்
PTLM - Paid to listening music
பல பணக்காரர்கள் இசை கம்பெனிகள் தங்கள் இசையை மற்றவர் கேட்ட்க ஆசை படுவார்கள் .இதற்கென உள்ள வெப்சைட் களை அணுகி பணம் தருவார் .நாம் அந்த வெபிசிடிகளில் பதிவு செய்திருந்தால் ஓரிரு
நிமிட மியூசிக் வரும் நம் அதை கேட்க வேண்டும் அவ்வளவுதான் அதற்க்கு பணம் உண்டு ..

PTCW - paid to content wrighting

நிறுவங்கள் தங்கள் பொருள் செயல் முறையை பற்றி விளக்கி இருப்பார்கள் அதை கொஞ்சம் மாற்றி மானே தேனே பொன்மானே என்று அவர்கள் கேட்க்கும் மொழில் மொழி பெயர்க்க வேண்டும் பெரும்பாலும் ஆங்கிலம் தான் கேட்ப்பார்கள் ..அதற்க்கு ஒரு A 4 பக்கத்திற்கு குறைந்தது 1000ம் கிடைக்கும் இன்றய நிலவர படி

PTFC - paid content wrighting

அவர்கள் தரும் PD F  பயிலை word word file ஆக மாற்றுவது ..அவர்கள் தரும் format யை அவர்கள் கேட்பது போன்று மாற்றுவது அவ்வளவுதான்
PTSC - Paid to social media comment
நிறுவனங்களின் முகநூல் மற்றும் அவர்களின் இணையதளங்களின் பதிவுகளை படித்து comment போட்டால்
போதும் ..அதன் தவறுகளை சுட்டி காட்டினாலும் சரி பாராட்டினாலும் சரி payment உண்டு

PTT - Paid to transaction

அவர்கள் தரும் பதிவுகளை அவர்கள் கேட்கின்ற மொழிக்கு ஏற்றவாறு transaction செய்வது .இதில் பல மொழிகள் அடக்கம்

சாதாரண கம்ப்யூட்டர் ஆப்ரேட் தெரிந்தவர்கள் முதல் கம்ப்யூட்டர் நன்கு தெரிந்தவர்கள் வரை ஆன்லைனில்
வேலை கொட்டி கிடக்கிறது

முகவரி : IQ online jobs
2/78,pachaiamman kovil street
nesavalar nagar, anna road,jalladiyan pettai,
medavakkam,chennai 108, Cell : 8190891983

Friday, 15 September 2017

டின்களில் பழரசம், ஜாம் பதபடுத்தல் தொழில்,



தொ ழில் தொடங்க ஆசைப்படுபவர் களுக்கு வாய்ப்பு தரும் வளமான நிலமாக இருக்கிறது கோவை, வேளாண் பல்கலைக்கழகம்.
வேளாண் பல்கலைக்கழகம் தந்தாலும் இது விவசாயத் தொழில் வாய்ப்பு இல்லை... உணவுப் பொருள் சார்ந்த தொழிலைத்தான் ஊக்குவிக்கிறது பல்கலைக் கழகம். கனடா நாட்டின் சர்வதேச மேம்பாட்டு முகமை உதவி யுடன் நடத்தப்படும் இந்தத் திட்டம் பற்றிப் பேசினார், அதைச் செயல்படுத்தும் தொழில் நுட்ப மையத்தின் தலைவராக இருக்கும் பேராசிரியர் தங்கவேல்.


‘‘குறைந்த மூலதனத்தில் சுயமாகத் தொழில்செய்ய விருப்பம் உள்ளவர் களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை முன்னேற்றும் திட்டம் இது!
இந்தப் பயிற்சித் திட்டதில் சேர, வயது வரம்பு, கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. தொழில் செய்வதற்கான குறைந்தபட்ச முதலீடு, உழைப்பதற்கான உற்சாகம், முயற்சி போதும்!
இங்கு அளிக்கப்படும் பயிற்சிகள், பாட்டில் மற்றும் டின்களில் பழரசம், ஜாம் போன்ற உணவுப் பொருட்களை பதப்படுத்தி அடைத்து அனுப்புவது எப்படி? என்பதுதான்!
பேக்கரி மற்றும் கன்ஃபெக்ஷனரி தயாரிப்புகள், மசாலா பொடி போன்ற சமையல் பொருட்களையும் தயாரிக்க பயிற்சி அளிப்பதோடு அவற்றை மார்க்கெட்டிங் செய்வது தொடர் பான ஆலோசனைகளும் வழங்கு கிறோம்’’ என்றார் தங்கவேல்.

ஒரு மாத பயிற்சி, 10,000 ரூபாய் கட்டணம் என்பதாக இருக்கிறது இந்தப் பயிற்சிமுறை! பயிற்சி முடிந்தபின் வழங்கப்படும் சான்றிதழை வைத்து வங்கிக் கடன் பெற்று சுயமாகத் தொழில் தொடங்கலாம்.

‘‘பெரிய இயந்திரங்களை நிறுவித்தான் தொழிற்சாலையை ஆரம்பிக்க வேண்டும் என்பதில்லை. எங்கள் மையத்தில் உறுப்பினர் களாகச் சேர்ந்து, குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்திவிட்டு எங்களிடம் உள்ள பதப்படுத்து தலுக்குத் தேவையான இயந்திரங் களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுயமாக இதுபோன்ற தொழில் கூடத்தை உருவாக்கவும் ஆலோசனை கள் வழங்குகிறோம். இளைஞர்கள், பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் இதன்மூலம் பயன்பெறு கிறார்கள்’’ என்றார்.

மாதம் தோறும் இருபது நபர்களுக்கு இந்த மையத்தின் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள், ஒரு வாரம், ஒரு மாதம் என்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. இந்தப் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறது பல்கலைக் கழகம்!




பங்கு வர்த்தகம்: ஆஃப்லைன், ஆன்லைன்



பங்கு வர்த்தகம்: ஆஃப்லைன், ஆன்லைன்
பங்கு வர்த்தகத்துல ஆஃப்லைன், ஆன்லைன் அப்படின்னு ரெண்டு வசதி இருக்கு. 

ஆஃப்லைன்ங்குறது புரோக்கர்கிட்ட நேர்லயோ, போன் மூலமாவோ ஷேர் வாங்கச் சொல்றது.

ஆன்லைன்ங்குறது, புரோக்கிங் கம்பெனி, நமக்குன்னு கொடுத்திருக்குற யூசர் ஐ.டி. பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, இன்டர்நெட் மூலமா நேரடியா பங்கு வர்த்தகம் பண்றது. பங்குச் சந்தையோட நெளிவு, சுளிவு தெரியாம, ஆன்லைன் ஷேர் டிரேடிங்கில்  இறங்குறது அவ்வளவா நல்லதில்லை. 

இந்த ஆன்லைன் டிரேடிங் செய்யறதுக்கான அக்கவுன்டை பேங்க்ல ஆரம்பிச்சா, அது த்ரீ -இன் -ஒன் அக்கவுன்டா இருக்கும். அதாவது பேங்க் அக்கவுன்ட், டீமேட் அக்கவுன்ட், டிரேடிங் அக்கவுன்ட் மூணும் ஒரே இடத்துல கிடைக்கும். பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும், அதுக்கான பணப் பரிமாற்றம், நம்ம-ளோட பேங்க் கணக்குல கம்ப்யூட்டர் மூலமா தானா நடக்கும்.

இதே ஆன்லைன் அக்கவுன்டை ஷேர் புரோக்கிங் ஆபீஸ்ல ஆரம்பிச்சா, பேங்க் அக்கவுன்ட் தனியாவும், டீமேட் மற்றும் ஆன்லைன் டிரேடிங் கணக்கு தனியாவும் இருக்கும். ஆன்லைன் டிரேடிங் செய்ய இன்டர்நெட் கனக்ஷனோட இருக்கிற கம்ப்யூட்டர் அவசியம். அதுக்காக பிரவுசிங் சென்டர்ல போயி ஆன்லைன் டிரேடிங் செய்யக்கூடாது. ஏன்னா அது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை.


இப்போ பங்குகளை வாங்குற அளவுக்குத் தயாராகிட்டீங்களா..? அதாவது உபரியா இருக்கற சேமிப்பு பணத்தைத்தான் பங்குச் சந்தையில் போடுறதுனு முடிவு பண்ணி-யிருக்கீங்க... அதுக்கான டீமேட் கணக்கு, டிரேடிங் கணக்கு எல்லாம் ரெடியாகிடுச்சு... அப்படித்தானே..! 

துடைப்பம் தயாரித்தல்


பார்த்தால் சின்ன துடைப்பம்தான்... ஆனால், அதற்குப் பின்னால் கொட்டிக்கிடக்கும் வருமானத்தைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
‘‘நம் மாநிலத்தில் தென்னைமரம் இல்லாத ஊர் கிடையாது. அதனால், இந்த தென்னந்துடைப்பம் தொழிலுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கப் போவதில்லை. சிறிய அளவில் தொழில் தொடங்க நினைப்பவர்கள் தாராளமாக இந்தத் தொழிலில் இறங்கலாம்’’ என்று நம்பிக்கை கொடுக்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த பைசுல் ஹுசைன்.
இந்த சுற்றுவட்டாரத்தில் மட்டும் 10 துடைப்பம் மண்டிகள் இருக்கின்றன. இங்கு தயாராகும் தென்னந்துடைப் பங்கள் வட மாநிலங்களில் ஏக பிரசித்தம்.
40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும், குறைந்தபட்சம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கலாம். மழைக் காலம் தொழில் நடத்த ஏதுவாக இருக்காது.
இந்தத் தொழிலின் தன்மை பற்றி விவரித்தார் பைசுல்ஹுசைன். ‘‘வீடு, தோப்புகளில் கிடைக்கும் தென்னங்கீற்றுகளில் இருந்து கிழித்து எடுக்கப்பட்ட குச்சிகளைச் சேர்த்துக்கட்டி, துடைப்பமாக்கி வைப்பார்கள். அதை இரண்டு அல்லது மூன்று ரூபாய் கொடுத்து வாங்கி மொத்த வியாபாரிகளுக்குக் கொடுத்து லாபம் பார்க்கும் சிறு தொழிலாளிகளும் இருக்கிறார்கள்.
சுமார் அரைக்கிலோ எடை நிற்கும் துடைப்பத்தை வாங்கி வந்து மொத்த வியாபாரியிடம் கொடுக்கும்போது அவர்கள் எடைபோட்டுத்தான் எடுக்கிறார்கள். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் எட்டு ரூபாய் கிடைக்கிறது. ஆக, ஒரு துடைப்பத்துக்கு லாபமே இரண்டு ரூபாய்க்குக் குறையாமல் கிடைக்கும். ஒரு நாளில் 200 துடைப்பங்களைக்கூட சேகரிக்கிறார்கள். அவர்களுடைய தினசரி வருமானம் 300 முதல் 400 ரூபாயாக இருக்கிறது. செலவுகள் எல்லாம் போக லாபமாக குறைந்தபட்சம் 250 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்’’ என்றார்.
இந்தத் தொழிலில் இன்னொரு தரப்பு, மொத்த வியாபாரிகள்... இவர்கள் சேகரிக்கும் துடைப்பங்களைத் தரம் பிரித்து, ஐம்பது ஐம்பதாக பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்து ஃபார்வேர்டிங் ஏஜென்ட்கள் மூலமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ஒரு பண்டலின் விலை 300 முதல் 800 ரூபாய் வரையில் தரத்துக்கு ஏற்ப அமைகிறது. ஃபார்வேர்டிங் ஏஜென்ட்களுக்கு 3% கமிஷன் கொடுத்தாலும் மொத்த வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
இதில் துடைப்பங்களை அடுக்கி வைப்பதற்கு இடம், அதை தரம்வாரியாக பிரித்து சுத்தம் செய்வதற்கு வேலையாட்கள் என்கிற அளவில் சிறு முதலீடு செய்ய வேண்டியிருக்கும்’’ என்றார்.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் துடைப்பங்களுக்கான சீசன் உச்சத்தில் இருக்கும். மழைக்காலம் தவிர்த்த மற்ற மாதங்களிலும் நிரந்தர வருமானம் கிடைக்கக்கூடிய தொழில் இது.
அதோடு, சராசரியாக 100 பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கக்கூடிய தொழிலாக இருக்கிறது.
சுத்தமாக இருக்கப் பயன்படுத்தும் துடைப்பங்கள் நமக்குச் சோறு போடும் என்பது இந்தத் தொழிலுக்கு நிச்சயம் பொருந்தும்!
நன்றி : பைசூல் ஹுசைன் 

அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு

அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு














கோடி ரூபாய் போட்டு வீடு கட்டினாலும் அதற்குக் கூடுதல் அழகு சேர்ப்பது சில நூறு ரூபாய் மதிப்புள்ள அலங்காரப் பொருட்கள்தான். தற்போது, அநேகமாக எல்லோர் வீட்டின் வரவேற்பறையிலும் தனி இடத்தைப் பிடித்து ஒரு தவிர்க்க முடியாத பொருளாகிவிட்ட அலங்காரப் பொருட்களைத் தயாரிப்பது அட்டகாசமான வருமானத் தொழிலாக இருக்கிறது. இதற்கு முதலீடு என்று பெரிதாக ஏதும் தேவைப்படாது.
ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான முதலீடு இருந்தாலே போதும், யார் வேண்டுமானாலும் இதில் இறங்கி காசு பார்க்கலாம். அலங்காரப் பொருட்கள் தயாரிக்க தனித்திறமை வேண்டுமே என்று மலைக்கவேண்டாம். கொஞ்சம் ரசனை மட்டும் இருந்தாலே போதும். இந்தப் பொருட்களைத் தயாரிப்பதற்கு தனியே இடம் பிடிக்கத் தேவையில்லை. வீட்டின் ஒரு பகுதியிலேயே இதைச் செய்யமுடியும் என்பதால் பெண்களுக்கு ஏற்ற வாய்ப்பாகவும் இருக்கிறது.

குடும்பத்திலுள்ள பெண்கள் தயாரித்துத் தரும் பொருட்களை, ஆண்கள் விற்பனை செய்து லாபமீட்ட முடியும். மக்களின் ரசனையை அறிந்து அதற்குத் தகுந்தாற் போல் தயாரித்துக் கொடுத்தாலே போதும், காசு வீடுதேடி வரும்.
இதற்குத் தேவையான பொருட்கள்... வெல்வெட், சாட்டின், ஆர்கண்டி போன்ற துணிகள், விதவிதமான குண்டுமணிகள், காய்ந்த புற்கள் (டிரை கிராஸ்), பேப்பர்(துணி, பிளாஸ்டிக்) பூக்கள், நூல்கண்டு, கத்தரிக்கோல், ஃபெவிக்கால் - இவ்வளவுதான். இந்தப் பொருட்கள் நகரங்களிலுள்ள கிராஃப்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். இவற்றைக்கொண்டு நம் கற்பனைக் கேற்ற விதவிதமான வடிவங்களில் பூக்களை தயார் செய்யலாம். கூடை அல்லது தென்னம்பாளையின் அடிப்பகுதியில், டிரை கிராஸ்களை வைத்து ஃபெவிக்கால் கொண்டு ஒட்டவேண்டும். அதனிடையே பூக்களை ஒட்ட வேண்டும். இவை மற்றவர்களைக் கவரக் கூடியதாகவும், அழகிய வண்ணங்களில் பார்ப்பதற்கு இயற்கையானது போலவும் இருக்க வேண்டும். தென்னம்பாளையை அடிப்பகுதியாகக் கொண்டு, அதன் மேல் பூக்களை அழகாக அடுக்கித் தயாரிக்கப்படும் பொக்கேதான் லேட்டஸ்ட் வெரைட்டி. இதைத்தவிர, சிறுசிறு கூடைகள் தயாரித்து அதில் பூக்களை வைத்தும் அழகுபடுத்தலாம். மேலும், அழகிய சிறு சிறு கிஃப்ட் பாக்ஸ்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.


அலங்கார பொருட்கள் தயாரிப்பு பயிற்சிக்கு 



அழைக்கவும் .



வனஜா :9788328368



CD,BOOK மற்றும் மூல பொருட்கள் கிடைக்கும் 





சணல் கயிறுகளை வைத்து வால் ஹேங்கர், பேப்பர் ஹேங்கர், பேனா - பென்சில்களை வைத்துக் கொள்ள ஹோல்டர் என புதுபுதுப் பொருட்களைத் தயார் செய்யலாம். இவற்றை தவிர, சணல் ஷீட்களில் எம்ப்ராய்டரி போட்டு அழகிய கால் மிதிகளாகவும் செய்யலாம். இவற்றுக்கும் இன்றைய மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது.


கம்ப்யூட்டர் சி.டி-க்கள் வீணானவை கிடைத்தால், அதில் விதவிதமான மணிகளை ஒட்டி டிஸைன் செய்து, நடுவில் கடவுள் படங்களை இணைத்து புது வித அலங்காரப் பொருட் களை உருவாக்கலாம். இப்போது புதிய சி.டி-க்களே ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதையும் பயன்படுத்தலாம். மெழுகுவத்தியை உருக்கி, டையின் உதவி யுடன் கலர்ஃபுல்லான பூஞ்செடிகளைத் தயாரித்து, அதில் அழகான பிளாஸ்டிக் அல்லது துணிப் பூங்கொத்துகளை இணைத்துத் தரலாம்.

ஒரு பொருளை எவ்வளவு அழகோடு தயாரிக்கிறோமோ அந்த அளவுக்கு விலை நிர்ணயம் செய்யலாம். இப்படித் தயாரிக்கும் பொருட்களை அதன் அளவு, கலைநுட்பத்தைப் பொறுத்து, 10 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரைகூட விற்பனை செய்யமுடியும். உங்களது தயாரிப்புகளின் மாதிரிகளை புகைப்பட ஆல்பமாக்கிக் காட்டி, ஆர்டர் பிடித்தும் செய்து கொடுக்கலாம். வீட்டை அலங்கரிக்க மட்டுமல்லாமல், ஏதாவது விழாக்கள் நடந்தால் அதில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு நினைவுப் பரிசாக அலங்காரப் பொருட்களைக் கொடுப்பதும் தற்போது ஃபேஷனாகி இருக்கிறது என்பதால் இதன் விற்பனை வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
ஒரு நாளைக்கு குறைந்தது பத்திலிருந்து இருபது அலங்கார பொக்கேக்கள் தயாரிக்கமுடியும். ஐந்து பொக்கே விற்றால்கூட, ஒரு நாளைக்கு 300-500 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இதற்கு செலவு என்று பார்த்தால் கொஞ்சம்தான். அழகு படுத்துவதில்தான் விஷயம் இருக்கிறது. சின்னச் சின்ன பொம்மைகளை செய்து அவற்றை இணைத்தும் அசத்தலாம். கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதும், எளிதில் பணம் பார்க்கமுடியும். மாதம் குறைந்தது 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம்.
அலங்காரப் பொருட்களை எப்படி, எங்கே கொடுத்து விற்பது என்கிறார்களா? உங்கள் ஊரிலுள்ள ஃபேன்ஸி ஸ்டோர்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், கலை அலங்காரப் பொருள் விற்பனை நிலையங்களில் கொடுக்கலாம். கிஃப்ட் சென்டர்கள் மூலமும் விற்கமுடியும்.

உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்றும், அவர்களுக்குத் தேவையான மாடல் களைக் காட்டியும் ஆர்டர் பிடிக்கலாம். அபார்ட்மென்ட்கள் நிறைந்த ஏரியாக்களுக்குச் சென்றால் ஒரேநேரத்தில் நிறைய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நல்ல தொடர்புகளும் சரியான வாய்ப்பும் இருந்தால், வெளிநாடுகளுக்குக்கூட ஏற்றுமதி செய்யமுடியும்.
தயாரிப்புப் பொருட்கள் தரமானதாகவும், அழகாகவும் இருந்தால்தான் அடுத்தடுத்து ஆர்டர்கள் வரும். கை நிறையப் பணமும் கிடைக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஒவ்வொரு தயாரிப்பிலுமே தரம்தான் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். அப்போதுதான், ஏற்கெனவே வாங்கியவர்கள் புதிய ஆர்டர் தர நம்மைத் தேடுவார்கள்.
நம் தயாரிப்பின் பெயர், நம் தொலைபேசி எண் கொண்ட சிறு ஸ்டிக்கரை ஒவ்வொரு தயாரிப்பிலும் ஒட்டி அனுப்புவது நம் தயாரிப்புகளுக்குப் பெருமை சேர்த்து, ஆர்டர் தேடிவர வைக்கும்.
என்ன, இறங்கிடலாம்தானே!


அலங்கார பொருட்கள் தயாரிப்பு பயிற்சிக்கு 



அழைக்கவும் .



வனஜா :9788328368


CD,BOOK மற்றும் மூல பொருட்கள் கிடைக்கும் 

பெட் பாட்டில் தயாரிப்பு

பெட் பாட்டில் தயாரிப்பு முறை





கண்ணாடி பாட்டில்களுக்கு மாற்றாக வந்திருப்பவைதான் பெட் பாட்டில்கள். கண்ணாடி பாட்டில்களைவிடக் கூடுதல் பாதுகாப்பும், காற்றழுத்தத்தைத் தாங்கக்கூடிய தன்மையும் கொண்டவை இந்த பெட் பாட்டில்கள். ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடலாம் அல்லது இந்தப் பாட்டில்களை மறுசுழற்சி செய்யலாம் என்பதால் பெட் பாட்டில் தயாரிக்கும் தொழிலுக்கு நிறைய வரவேற்பு!
மருந்து மற்றும் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவை அடைத்து விற்பதற்கும், ஊறுகாய், பினாயில் போன்றவை அடைப்பதற்கும் ஏற்ற சின்னச் சின்னப் பாட்டில்கள் விற்பனைக்கான வாய்ப்புகளாக உள்ளன. எந்தப் பகுதியிலும் இந்தத் தொழிலை தொடங்கலாம் என்பது இதிலிருக்கும் கூடுதல் சிறப்பு.
பெட் என்பது கிரானுவல் டைப்பில் வரும். இதை இன்ஜெக்ஷன் மோல்டிங் என்கிற முறையில் பிரீஃபார்ம் (Preform)  என்கிற சிறிய பாட்டில்களாகத்  தயாரிப்பார்கள். இது சிறிய காற்று அடைக்கப்பட்ட பலூன்போல இருக்கும். இதுதான் பெட் பாட்டில் தயாரிப்பின் மூலப்பொருள்.
பெட் பாட்டில் தயாரிக்க அந்த இயந்திரங்களில் பொருத்துவதற்குத் தேவையான அளவு அச்சுக்களை இணைக்க வேண்டும். இந்த இயந்திரத்துடன் காற்று அழுத்தம் உள்ள கம்ப்ரஸர் இணைப்பு வேண்டும். இந்த பிரீஃபார்ம் பாட்டில்களை இயந்திரத்தில் பொருத்தி அழுத்தமான வெப்பக் காற்றை உட்செலுத்தினால்,  சிறிய பாட்டில் போன்ற வடிவம் விரிவடைந்து, நாம் பொருத்தி உள்ள அச்சின் வடிவம் பெற்று பாட்டில்களாக மாறும். அவற்றை வெளியே எடுத்து குளிர்வித்து, அதற்கான மூடியை இணைத்து விற்பனைக்கு அனுப்பலாம்!
பொதுவாக, பெட் பாட்டிலுக்கான பிரீஃபார்ம் விற்பனை செய்பவர்களே பெட் பாட்டில் மூடியையும் தயாரித்துத் தருவார்கள். நாம் மூடியுடனோ அல்லது மூடியில்லாமலோ விற்பனை செய்யலாம்.
திட்ட அறிக்கை! (ரூ.)
பெட் பாட்டில் தயாரிக்கும் ஓர் இயந்திரத்தை வாங்க ரூ.5 லட்சம் ஆகும். நாம் இரண்டு இயந்திரங்கள் வாங்கலாம்.  ஒரு மணி நேரத்தில் 1,200 பாட்டில்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். இதற்கான கம்ப்ரஸர் இயந்திரம் ரூ.6 லட்சம் ஆகும்.
கட்டடம்: வாடகை (அ) சொந்தமாக
இரண்டு இயந்திரங்கள் : 10 லட்சம்
கம்ப்ரஸர் இயந்திரம் : 6 லட்சம்
மின்சாரம் : 1 லட்சம்
நடைமுறை மூலதனம் : 6 லட்சம்

Thursday, 14 September 2017

ஏற்றுமதி இறக்குமதி முழு விவரங்கள் தமிழில்

Import Export Business Details in tamil




Import Export Business Details in tamil - ஏற்றுமதி இறக்குமதி செய்வது எப்படி - 1

எஸ்.எம்.இ.கள் தயாரிக்கும் பொருட்களை உள்ளூரில்தான் விற்றாக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. எந்தப் பொருளாக இருந்தாலும் அதை தரமாக தயார் செய்தால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, பெரிய அளவில் லாபம் பார்க்கலாம். உள்ளூரில் தங்கள் தயாரிப்பை கனஜோராக விற்பனை செய்கிற எஸ்.எம்.இ.கள், இனி அடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்த இதுவே சரியான நேரம். வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய என்ன செய்ய வேண்டும்? அதனால் என்ன பயன், அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் (Federation of Indian Export Organisations) துணை இயக்குநர் கே.உன்னிகிருஷ்ணனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

் 45% பங்களிப்பு எஸ்.எம்.இ.கள் மூலமே கிடைக்கிறது. நாட்டின் ஏற்றுமதியில் பெரும்பான்மை சதவிகிதத்தை எஸ்.எம்.இ.கள் கொண்டுள்ளதால் அவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏற்றுமதியில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதாலும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு நல்ல வரவேற்பு உள்ளதாலும் எஸ்.எம்.இ.கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்துவது அவசியம். ஏற்றுமதியாளர் களிடம் அவர்களது பொருளை வாங்குபவர்கள் அதிகம் எதிர்பார்ப்பது சரியான தரமும், குறித்த நேரத்தில் குறித்த அளவில் பொருளை தயார் செய்துதர வேண்டும் என்பதையுமே.  இதனை சரியாகச் செய்தாலேபோதும், தொடர்ந்து ஆர்டர்களைப் பெற்று, நல்ல லாபம் பார்க்க முடியும்.

எஸ்.எம்.இ.கள் ஏற்றுமதியில் ஈடுபடுவதற்கு முதலில் அரசாங்கத்திடம் தங்கள் நிறுவனத்தை பதிவு செய்ய  வேண்டும். இதற்கு ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகத்தில் (Export Promotion Council) தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்து ஏற்றுமதி, இறக்குமதிக்கான குறியீட்டை பெற வேண்டும். மேலும், ஃபியோ போன்ற அமைப்புகள் ஏற்றுமதியாளர்களுக்கான விழிப்பு உணர்வு கூட்டங்களை நடத்துகிறது. அதில் 
கலந்துகொண்டும் பயன் பெறலாம்.

சிலர் எங்களிடம், 'நான் நன்றாகத் தொழில் செய்கிறேன். நான் எப்படி ஏற்றுமதி செய்வது?’ என்று கேட்பார்கள். நாங்கள் நடத்தும் விழிப்பு உணர்வு கூட்டங்களில் பங்கு பெறுவதன் மூலம், உள்ளூர் மார்க்கெட்டை மட்டுமே புரிந்து வைத்திருப்பவர்களுக்கு  வெளியூர் மார்க்கெட் பற்றியும் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
ஏற்றுமதி செய்யும்போது உங்கள் முழுக் கவனமும் தரத்தில் இருக்க வேண்டும். காரணம், நீங்கள் தயாரிக்கும் பொருளில் சிறு குறை ஏற்பட்டாலும் உங்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் தந்த நிறுவனம் அந்தப்  பொருளை வாங்காமல் போவதற்கு வாய்ப்புண்டு. நீங்கள் வாங்கும் மூலப்பொருட்கள் தரமானதா, உங்கள் தயாரிப்பு முறையில் ஏதாவது சிக்கல் உள்ளதா என்பதில் தொடங்கி, பொருட்கள் கெட்டுப்போகாத வகையில் பேக்கேஜ் செய்யப்படுகிறதா என்பது வரை அனைத்தையுமே கவனிக்க வேண்டும்.
ஏற்றுமதி ஆர்டர் தரும் வெளிநாட்டு நிறுவனங்கள் நமது எஸ்.எம்.இ.களிடம் சில விஷயங்களில் அதிருப்தி அடைகின்றன. உதாரணமாக, 'எங்களால் அதிக பொருளை தயாரித்துத் தரமுடியும்’ என்று கூறிவிட்டு, அந்த அளவு பொருளை தயாரித்துத் தரமுடியாத நிலை ஏற்படும்போது, ஆர்டர் தந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைகின்றன. அல்லது சரியான தரத்தில் பொருளைத் தயார் செய்து தரமுடியாத நிலை ஏற்படும்போதும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைகின்றன. ஆரம்பத்தில் நல்ல தரத்தில் பொருட்களைத் தயார் செய்து தந்துவிட்டு பின்னர் அந்தத் தரத்தை தொடர முடியாதபோதும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைகின்றன.  வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது, இந்தக் குறைகள் சிறிதும் இல்லாமல் இருப்பது தொடர்ந்து ஆர்டர்களை பெற உதவும்.  
ஏற்றுமதி செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை:
1. எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்போகிறீர்களோ, அந்த நாட்டின் மார்க்கெட்டை நன்கு ஆராய வேண்டும். அங்கு என்னென்ன பொருட்கள் அதிகம் விற்கும், எவ்வளவு விற்கும் என்பது போன்ற தகவல்களை அறிந்துகொள்வது அவசியம்.
2. மூலப்பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவது அவசியம். அப்போதுதான் அவர்களால் ஒரே மாதிரியான தரத்தில் பொருட்களை தயாரிக்க முடியும்; சரியான நேரத்தில் டெலிவரி தரவும் முடியும்.
3. பொருட்களை தொலைதூரத்துக்கு அனுப்புவதால் பேக்கேஜிங்கில் நல்ல தொழில்நுட்பத்தையும், அதற்கேற்றவாறு பாதுகாப்பான பேக்கிங் முறைகளையும் பின்பற்றுவது அவசியம். ஏற்றுமதியாகும்  பொருட்கள் தட்பவெட்ப நிலையால் பாதிப்படையாதபடி பேக்கிங் செய்வது அவசியம்.

4. வெளிநாட்டுக்கு நீங்கள் அனுப்பும் பொருளை இன்ஷூரன்ஸ் செய்வது அவசியம். அப்போதுதான், அனுப்பப்படும் பொருள் இடையில் சேதமானாலோ அல்லது திடீர் போர் காரணமாக பாதிப்படைந்தாலோ அதற்கான இழப்பீட்டை பெற முடியும்.
5. ஏற்றுமதி செய்யப்படும் பொருட் களுக்கு பலவிதமான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. இது நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் இந்தப் பொருட்கள்  தயாரிக்கப்பட்டுள்ளன என அந்த நாடு சான்றிதழ் அளிக்கும். ஏற்றுமதி செய்வதற்கு இந்தச் சான்றிதழ் பெறுவது அவசியம்.

இவை தவிர, இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் திட்டங்களை உருவாக்கி யுள்ளது. இதன் முக்கிய நோக்கமே, இந்திய தயாரிப்புகளை மற்ற நாடுகளில் பிரபலப்படுத்துவதுதான். மேலும், உலகின் பல நாடுகளில் எங்கெங்கு, என்னென்ன பொருட்கள் தேவைப் படுகின்றன, அதனை யார், யார் தயாரிக்கிறார்கள் என்கிற தகவல்களை எஸ்.எம்.இ.களுக்கு எடுத்துச் சொல்கிறது'' என்றார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது பணத்தை பாதுகாப்பாக பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் ஏற்றுமதி செய்பவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் சலுகைகளைப் பற்றியும் அடுத்த வாரம் பார்ப்போம்.