அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு
கோடி ரூபாய் போட்டு வீடு கட்டினாலும் அதற்குக் கூடுதல் அழகு சேர்ப்பது சில நூறு ரூபாய் மதிப்புள்ள அலங்காரப் பொருட்கள்தான். தற்போது, அநேகமாக எல்லோர் வீட்டின் வரவேற்பறையிலும் தனி இடத்தைப் பிடித்து ஒரு தவிர்க்க முடியாத பொருளாகிவிட்ட அலங்காரப் பொருட்களைத் தயாரிப்பது அட்டகாசமான வருமானத் தொழிலாக இருக்கிறது. இதற்கு முதலீடு என்று பெரிதாக ஏதும் தேவைப்படாது.
ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான முதலீடு இருந்தாலே போதும், யார் வேண்டுமானாலும் இதில் இறங்கி காசு பார்க்கலாம். அலங்காரப் பொருட்கள் தயாரிக்க தனித்திறமை வேண்டுமே என்று மலைக்கவேண்டாம். கொஞ்சம் ரசனை மட்டும் இருந்தாலே போதும். இந்தப் பொருட்களைத் தயாரிப்பதற்கு தனியே இடம் பிடிக்கத் தேவையில்லை. வீட்டின் ஒரு பகுதியிலேயே இதைச் செய்யமுடியும் என்பதால் பெண்களுக்கு ஏற்ற வாய்ப்பாகவும் இருக்கிறது.
கோடி ரூபாய் போட்டு வீடு கட்டினாலும் அதற்குக் கூடுதல் அழகு சேர்ப்பது சில நூறு ரூபாய் மதிப்புள்ள அலங்காரப் பொருட்கள்தான். தற்போது, அநேகமாக எல்லோர் வீட்டின் வரவேற்பறையிலும் தனி இடத்தைப் பிடித்து ஒரு தவிர்க்க முடியாத பொருளாகிவிட்ட அலங்காரப் பொருட்களைத் தயாரிப்பது அட்டகாசமான வருமானத் தொழிலாக இருக்கிறது. இதற்கு முதலீடு என்று பெரிதாக ஏதும் தேவைப்படாது.
ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான முதலீடு இருந்தாலே போதும், யார் வேண்டுமானாலும் இதில் இறங்கி காசு பார்க்கலாம். அலங்காரப் பொருட்கள் தயாரிக்க தனித்திறமை வேண்டுமே என்று மலைக்கவேண்டாம். கொஞ்சம் ரசனை மட்டும் இருந்தாலே போதும். இந்தப் பொருட்களைத் தயாரிப்பதற்கு தனியே இடம் பிடிக்கத் தேவையில்லை. வீட்டின் ஒரு பகுதியிலேயே இதைச் செய்யமுடியும் என்பதால் பெண்களுக்கு ஏற்ற வாய்ப்பாகவும் இருக்கிறது.
குடும்பத்திலுள்ள பெண்கள் தயாரித்துத் தரும் பொருட்களை, ஆண்கள் விற்பனை செய்து லாபமீட்ட முடியும். மக்களின் ரசனையை அறிந்து அதற்குத் தகுந்தாற் போல் தயாரித்துக் கொடுத்தாலே போதும், காசு வீடுதேடி வரும்.
இதற்குத் தேவையான பொருட்கள்... வெல்வெட், சாட்டின், ஆர்கண்டி போன்ற துணிகள், விதவிதமான குண்டுமணிகள், காய்ந்த புற்கள் (டிரை கிராஸ்), பேப்பர்(துணி, பிளாஸ்டிக்) பூக்கள், நூல்கண்டு, கத்தரிக்கோல், ஃபெவிக்கால் - இவ்வளவுதான். இந்தப் பொருட்கள் நகரங்களிலுள்ள கிராஃப்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். இவற்றைக்கொண்டு நம் கற்பனைக் கேற்ற விதவிதமான வடிவங்களில் பூக்களை தயார் செய்யலாம். கூடை அல்லது தென்னம்பாளையின் அடிப்பகுதியில், டிரை கிராஸ்களை வைத்து ஃபெவிக்கால் கொண்டு ஒட்டவேண்டும். அதனிடையே பூக்களை ஒட்ட வேண்டும். இவை மற்றவர்களைக் கவரக் கூடியதாகவும், அழகிய வண்ணங்களில் பார்ப்பதற்கு இயற்கையானது போலவும் இருக்க வேண்டும். தென்னம்பாளையை அடிப்பகுதியாகக் கொண்டு, அதன் மேல் பூக்களை அழகாக அடுக்கித் தயாரிக்கப்படும் பொக்கேதான் லேட்டஸ்ட் வெரைட்டி. இதைத்தவிர, சிறுசிறு கூடைகள் தயாரித்து அதில் பூக்களை வைத்தும் அழகுபடுத்தலாம். மேலும், அழகிய சிறு சிறு கிஃப்ட் பாக்ஸ்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
அலங்கார பொருட்கள் தயாரிப்பு பயிற்சிக்கு
அழைக்கவும் .
வனஜா :9788328368
CD,BOOK மற்றும் மூல பொருட்கள் கிடைக்கும்
சணல் கயிறுகளை வைத்து வால் ஹேங்கர், பேப்பர் ஹேங்கர், பேனா - பென்சில்களை வைத்துக் கொள்ள ஹோல்டர் என புதுபுதுப் பொருட்களைத் தயார் செய்யலாம். இவற்றை தவிர, சணல் ஷீட்களில் எம்ப்ராய்டரி போட்டு அழகிய கால் மிதிகளாகவும் செய்யலாம். இவற்றுக்கும் இன்றைய மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
கம்ப்யூட்டர் சி.டி-க்கள் வீணானவை கிடைத்தால், அதில் விதவிதமான மணிகளை ஒட்டி டிஸைன் செய்து, நடுவில் கடவுள் படங்களை இணைத்து புது வித அலங்காரப் பொருட் களை உருவாக்கலாம். இப்போது புதிய சி.டி-க்களே ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதையும் பயன்படுத்தலாம். மெழுகுவத்தியை உருக்கி, டையின் உதவி யுடன் கலர்ஃபுல்லான பூஞ்செடிகளைத் தயாரித்து, அதில் அழகான பிளாஸ்டிக் அல்லது துணிப் பூங்கொத்துகளை இணைத்துத் தரலாம்.
ஒரு பொருளை எவ்வளவு அழகோடு தயாரிக்கிறோமோ அந்த அளவுக்கு விலை நிர்ணயம் செய்யலாம். இப்படித் தயாரிக்கும் பொருட்களை அதன் அளவு, கலைநுட்பத்தைப் பொறுத்து, 10 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரைகூட விற்பனை செய்யமுடியும். உங்களது தயாரிப்புகளின் மாதிரிகளை புகைப்பட ஆல்பமாக்கிக் காட்டி, ஆர்டர் பிடித்தும் செய்து கொடுக்கலாம். வீட்டை அலங்கரிக்க மட்டுமல்லாமல், ஏதாவது விழாக்கள் நடந்தால் அதில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு நினைவுப் பரிசாக அலங்காரப் பொருட்களைக் கொடுப்பதும் தற்போது ஃபேஷனாகி இருக்கிறது என்பதால் இதன் விற்பனை வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
ஒரு நாளைக்கு குறைந்தது பத்திலிருந்து இருபது அலங்கார பொக்கேக்கள் தயாரிக்கமுடியும். ஐந்து பொக்கே விற்றால்கூட, ஒரு நாளைக்கு 300-500 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இதற்கு செலவு என்று பார்த்தால் கொஞ்சம்தான். அழகு படுத்துவதில்தான் விஷயம் இருக்கிறது. சின்னச் சின்ன பொம்மைகளை செய்து அவற்றை இணைத்தும் அசத்தலாம். கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதும், எளிதில் பணம் பார்க்கமுடியும். மாதம் குறைந்தது 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம்.
அலங்காரப் பொருட்களை எப்படி, எங்கே கொடுத்து விற்பது என்கிறார்களா? உங்கள் ஊரிலுள்ள ஃபேன்ஸி ஸ்டோர்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், கலை அலங்காரப் பொருள் விற்பனை நிலையங்களில் கொடுக்கலாம். கிஃப்ட் சென்டர்கள் மூலமும் விற்கமுடியும்.
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்றும், அவர்களுக்குத் தேவையான மாடல் களைக் காட்டியும் ஆர்டர் பிடிக்கலாம். அபார்ட்மென்ட்கள் நிறைந்த ஏரியாக்களுக்குச் சென்றால் ஒரேநேரத்தில் நிறைய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நல்ல தொடர்புகளும் சரியான வாய்ப்பும் இருந்தால், வெளிநாடுகளுக்குக்கூட ஏற்றுமதி செய்யமுடியும்.
தயாரிப்புப் பொருட்கள் தரமானதாகவும், அழகாகவும் இருந்தால்தான் அடுத்தடுத்து ஆர்டர்கள் வரும். கை நிறையப் பணமும் கிடைக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஒவ்வொரு தயாரிப்பிலுமே தரம்தான் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். அப்போதுதான், ஏற்கெனவே வாங்கியவர்கள் புதிய ஆர்டர் தர நம்மைத் தேடுவார்கள்.
நம் தயாரிப்பின் பெயர், நம் தொலைபேசி எண் கொண்ட சிறு ஸ்டிக்கரை ஒவ்வொரு தயாரிப்பிலும் ஒட்டி அனுப்புவது நம் தயாரிப்புகளுக்குப் பெருமை சேர்த்து, ஆர்டர் தேடிவர வைக்கும்.
என்ன, இறங்கிடலாம்தானே!
அலங்கார பொருட்கள் தயாரிப்பு பயிற்சிக்கு
அழைக்கவும் .
வனஜா :9788328368
CD,BOOK மற்றும் மூல பொருட்கள் கிடைக்கும்






