Monday, 30 July 2018

ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்

நாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள் ஒன்று மட்டுமே பயன்படுத்த முடியும்..
இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள் Click this link more details  http://ceesty.com/wKuhkE

Thursday, 19 April 2018

செல்லோ டேப்!

பரிசுப் பொருட்களை அழகாக பேக்கிங் செய்யணுமா? கடித உறைகளை ஒட்டணுமா? படங்களை சுவரில் ஒட்டணுமா? இல்லை, குழந்தைகளின் கிழிந்துபோன நோட்டுப் புத்தகத்தை ஒட்டணுமா? எல்லாவற்றுக்கும் நாம் தேடும் ஒரே ஒரு பொருள் செல்லோ டேப்! அதுமட்டுமல்ல, டெக்ஸ்டைல்ஸ், தோல் பொருட்கள், ஹார்டுவேர் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்த செல்லோ டேப் மிக முக்கியமான பொருளாகப் பயன்படுகிறது. அவ்வளவு தேவை மிகுந்த பொருளான செல்லோ டேப் தயாரிப்பது குறித்துதான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம்...


சந்தை வாய்ப்பு!
ஸ்டேஷனரி கடைகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள் என சில்லறை கடைகளிலும் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் இந்த செல்லோ டேப்புகளை விற்பனை செய்ய முடியும். செல்லோ டேப் பிஸினஸ் ஒவ்வொரு ஆண்டும் 15% வளர்ச்சி காண்கிறது. தொழிற்துறை வளர்ச்சி காரணமாக இத்தொழிலுக்கு உருவாகி இருக்கும் சந்தை வாய்ப்பும் அதிகம். எனவே, 
திதாக இத்தொழிலில் இறங்குகிறவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.
முதலீடு!
குறைந்தபட்சம் 8 லட்சம் ரூபாய் முதல், கோடிக் கணக்கில் இதில் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 2.70 லட்சம் மீட்டர் செல்லோ டேப் தயாரிக்க சுமார் 18 லட்சம் முதலீடு தேவை.  
ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம், அடிசிவ். இந்த இரண்டும்தான் முக்கிய மூலப் பொருட்கள். போட்டோ ஃபிலிம் போல இருக்கிறது இந்த ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம். அப்படியே ரோல் ரோலாகக் கிடைக்கிறது. இந்த மூலப் பொருள் போபால் மற்றும் சென்னையிலும் கிடைக்கிறது. மேலும், அடிசிவ் என்பது பசை. முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் இதை அப்படியே விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்

யந்திரங்களைப் பொறுத்து வதற்கு, தயார் செய்த செல்லோ டேப்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கு என 1,500 முதல் 4,000 சதுரடி வரை இடம் தேவைப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ எடுத்து இந்த பிஸினஸைத் தொடங்கலாம்.

இயந்திரம்!
கோட்டிங் இயந்திரம், ஸ்லைட்டிங் (Slitting) மற்றும் ஸ்லைசிங் (sliving) இயந்திரம். இந்த மூன்றும்தான் முக்கிய இயந்திரங்கள். இவை இருந்தாலே செல்லோ டேப் தயாரிப்பு யூனிட்டை தொடங்கிவிடலாம். மேலும், கூடுதலாக கலர் பிரின்டிங் இயந்திரம் செல்லோ டேப்பில் எழுத்துக்கள் அச்சிட பயன்படுகிறது. கோட்டிங், ஸ்லைட்டிங் மற்றும் ஸ்லைசிங் இயந்திரம் இவை மூன்றும் எட்டு லட்ச ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும். அதற்கு அதிகமான விலையிலும் இயந்திரங்கள் கிடைக்கின்றன. இயந்திரங்கள் அனைத்தும் சென்னை மற்றும் புதுச்சேரியில் கிடைக்கிறது.

தயாரிப்பு முறை!
மூலப் பொருட்களான அடிசிவ் எனப்படும் பசையை டேப் கிரேடு ஃபிலிம் ரோலில் கோட்டிங் இயந்திரத்தின் மூலம் கோட்டிங் செய்ய வேண்டும். இந்த பசை ஈரப்பதத்துடன் இருப்பதால் அதனை பாய்லரில் 140 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் சூடுபடுத்தினால், செல்லோ டேப்பாக வந்துவிடுகிறது. காட்டன், நைலான், பிளாஸ்டிக் என பல வகையிலும் இந்த செல்லோ டேப்பைத் தயாரிக்கலாம். செல்லோ டேப் தயாரான பிறகு இதனை ஸ்லைசிங் இயந்திரத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுகளில் 5, 12, 15 மில்லி மீட்டர் என்கிற அளவுகளில் 'கட்’ செய்து கொடுத்துவிடலாம்.
மேலும், செல்லோ டேப்பில் ஏதேனும் வாசகம் பிரின்ட் செய்ய வேண்டும் எனில் கலர் பிரின்டிங் இயந்திரத்தின் மூலம் பிரின்ட் செய்து கொள்ள முடியும். 12,000 மீட்டர் டேப் கிரேடு ஃபிலிம்மில் 20,000 மீட்டர் செல்லோ டேப் தயாரிக்கலாம்.
வேலையாட்கள்!
திறமையான வேலை யாட்கள்-3, சாதாரண வேலையாட்கள்-5, மேனேஜர்-1, சூப்பர்வைஸர்-1, விற்பனை யாளர்- 2, மற்றவர்கள்-2 என மொத்தம் 14 நபர்கள் தேவைப்படுவார்கள்.

பிளஸ்!
பேக்கிங் செய்வது அனைத்து விதமான தொழில் களுக்கும் இன்றியமையாத விஷயம். எனவே, இதற்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தவிர, அதிக அளவிலான தயாரிப்பாளர்கள் கிடையாது என்பது கூடுதல் பலன்.
மைனஸ்!
மூலப் பொருட்களின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். தவிர, வாங்கும்போது ஒரு விலை, வாங்கிய பிறகு வேறொரு விலை என அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. இதற்கு தகுந்தாற்போல் விலையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
பலருக்கும் தெரியவராத தொழில் இது. போட்டிகள் அதிகம் இல்லாத தொழில் என்பது கூடுதல் சிறப்பு. ஆரம்பத்திலேயே இத்தொழிலில் இறங்கினால், நிச்சயம் ஜெயிக்கலாம்.

''தோதான விலையில் தந்தால் தோல்வி இல்லை!''
''இந்த நிறுவனம் எனது அப்பா ஆரம்பித்தது. எனது படிப்பு முடிந்ததும் நான் இந்த தொழிலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். செல்லோ டேப்பை வெறும் ஒட்ட வைப்பதற்கான ஒரு பொருள் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இதில் காட்டன், நைலான், லெதர் என பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. ஷூ-வில் அடிப்புற லேயராகவும், பைகள் மற்றும் பர்ஸ் வகைகளில் ஃபினிஷிங் வேலைகளைச் செய்யவும் பயன்படுகிறது. குறைந்தபட்ச முதலீடாக எட்டு லட்சம் ரூபாய் இருந்தாலே இந்த தொழிலை ஆரம்பித்துவிடலாம். நாங்கள் ஆண்டுக்கு 60 லட்சம் மீட்டர் செல்லோ டேப் தயாரிக்கிறோம். மூலப் பொருள் விலை மாற்றம் இத்தொழிலில் இருக்கும் பெரிய சிரமம். ஆனால், அதை சரியான முறையில் கணித்து வாடிக்கையாளருக்கு தோதான விலையில் கொடுத்தால், என்றும் நம்மை தேடிதான் வருவார்கள். தயாராகும் பொருட்களை டீலர்கள் மூலம் விற்பனை செய்யலாம். இல்லையெனில் நேரடியாகவும் ஆர்டர் எடுத்து செய்யலாம்.''

குடிசைத்தொழிலாக நூடுல்ஸ் தயாரித்து நிறைந்த லாபம் பார்க்கலாம்’ | noodles thayarippu

குடிசைத்தொழிலாக நூடுல்ஸ் தயாரித்து நிறைந்த லாபம் பார்க்கலாம்’
சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? , இதோ உங்களுக்கென ஒரு சிறு தொழில் டிப்ஸ்..















நூடுல்ஸ் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். பெரியவர்களும் வெளுத்துக்கட்டுகின்றனர். இதனால், நூடுல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. 'குடிசைத்தொழிலாக நூடுல்ஸ் தயாரித்து நிறைந்த லாபம் பார்க்கலாம்’ என்று கூறுகிறார் கோவை அஜ்ஜனூரை சேர்ந்த பூமாலை. அவர் கூறியதாவது: சொந்த ஊர் ஊட்டி. மதுரை காமராஜர் பல்கலையில் எம்ஏ பொது நிர்வாகவியல் படித்துள் ளேன். திருமணமான பின், கண வர் மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறேன். சிறுவயது முதலே  சுய தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்று ஆசை.
குடிசைத்தொழிலாக நூடுல்ஸ் தயாரித்து நிறைந்த லாபம் பார்க்கலாம். சிறு தொழில் 1: நூடுல்ஸ் தயாரிப்பு தொழில் விவரங்கள்

பெரும்பாலானோர் விரும்பும் நூடுல்ஸ் தயாரிக்க முடிவெடுத்தேன். கோவை வேளாண் பல்கலையில் நூடுல்ஸ் தயாரிப்பு பயிற்சி அளிப்பதை அறிந்து அங்கு ஒரு மாதம் பயற்சி பெற்றேன். பின்னர் இத்தொழிலில் ஈடுபட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக நூடுல்ஸ் தயாரித்து விற்கிறேன். தினமும் 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்களை பல்வேறு பிராண்ட் நிறுவனங்களுக்கு விற்கி றேன். அதை வாங் கும் நிறுவனங்கள் தங் கள் நிறுவன பெயரில் விற்கின்றனர்.

சோயா, கம்பு, தக்காளி, கீரை, ராகி என பல்வேறு வகை நூடுல்ஸ்கள் தயாரிக்கிறேன். புதிய சுவைகளிலும் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். புதுப்புது வகைகளை அறிமுகப்படுத்துவதால் ஆர்டர்கள் குவிகின்றன. குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக யார் வேண்டுமானாலும் நூடுல்ஸ் தயாரித்து, தங்கள் பகுதியில் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம்.

நூடுல்ஸ் தயாரிப்பது எப்படி?

பெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை மாவு, 7 லிட்டர் தண்ணீர் ஊற்றி புரோட்டா மாவு பதத்தில் பிசைய வேண்டும். மாவை பதப்படுத்தும் இயந்திரத்தில் போட்டால், சன்னமாக தேய்த்து, ரோல் செய்யும். அதை அதே இயந்திரத்தில் பொருத்தினால், தேய்க்கப்பட்ட மாவு வெட்டப்பட்டு நூல், நூலாக வெளியேறும்.  அதைக் கம்பியில் தொங்க விட்டு, வேக வைக்கும் பாய்லருக்குள் வைத்தால், 40 முதல் 50 நிமிடம் வேகும். அவற்றை தேவையான அளவுகளில் எடை போட்டு, டிரேயில் வைத்து வெயிலில் ஒருநாள் உலர்த்த வேண்டும்.

பின்னர், அவற்றை பேக்கிங் செய்தால் நூடுல்ஸ் தயார். பேக்கிங் பாக்கெட்டுக்குள், நூடுல்ஸ் சமைக்கும் போது சுவையூட்டும் மசாலா பொடி பாக்கெட்டும் இணைக்க வேண்டும். கம்பு, ராகி, தக்காளி நூடுல்ஸ் போன்றவை தயாரிக்கவும் இதே முறை தான். சோயா நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமை அளவுகளுடன் கூடுதலாக 30 கிலோ சோயா மாவு, 3 லிட்டர் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.

கம்பு, ராகி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் 30 கிலோ கம்பு அல்லது ராகி சேர்க்க வேண்டும். தக்காளி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் தக்காளி சாறு குறிப்பிட்ட அளவில் சேர்த்து பிசைய வேண்டும். தக்காளிகளை அவ்வப்போது வாங்கி தோல் நீக்கி, சாறு பிழிந்து பயன்படுத்த வேண்டும்.

கிடைக்கும் இடம்

மாவை பதப்படுத்தி, வெட்டும் இயந்திரம், வேக வைக்கும் பாய்லர் இயந்திரம், உலர்த்தும் டிரையர் ஆகியன வேளாண் பல்கலையின் வணிக மேம்பாட்டு மையம் மூலம் கிடைக்கும். கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வடிவமைத்து நேரிலும் வாங்கலாம்.

தளவாட சாமான்களான எடை போடும் கருவி, பேக்கிங் கவர், பேக்கிங் சீல் மெஷின், கத்தரிக்கோல் ஆகியவை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. கோதுமை, மைதா, சோயா, கம்பு, ராகி ஆகியவற்றை மொத்த கடைகளில் மாவாக அல்லது விவசாயிகளிடம் நேரடி யாக கொள்முதல் செய்து அரவை மில்லில் அரைத்து கொள்ளலாம்.

முதலீடு

பதப்படுத்தும் இயந்திரம் ரூ. 1.9 லட்சம், வேகவைக்கும் பாய்லர் இயந்திரம் ரூ.1 லட்சம், 50 கிலோ நூடுல்ஸ் வைக்கும் உலர்த்தும் டிரே 25 எண்ணிக்கை ரூ. 25 ஆயிரம். மற்ற தளவாட சாமான்கள் ரூ. 15 ஆயிரம்.



கட்டமைப்பு 

இயந்திரங்களை நிறுவ, பொருட்களை  இருப்பு வைக்க, ட்ரேயில் அடுக்க, பேக்கிங் செய்ய, மற்றும் அலுவலகத்திற்கு 25க்கு 25அடி நீள, அகலமுள்ள இடம். வாடகை இடமாக இருந்தால் அட்வான்ஸ் ரூ. 20 ஆயிரம்.

உற்பத்தி செலவு 

ஒரு நாளில் 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்கள் வீதம் (120 கி) 25 நாளில் 15 ஆயிரம் பாக்கெட்கள் (3 ஆயிரம் கிலோ) தயாரிக்கலாம். கோதுமை, மைதா உள்ளிட்ட மாவுப்பொருள்கள், 4 ஊழியர்கள் சம்பளம் (ரூ. 20 ஆயிரம்), மின்கட்டணம் (ரூ. 7 ஆயிரம்), இட வாடகை (ரூ. 2 ஆயிரம்), போக்குவரத்து செலவு (ரூ. 3 ஆயிரம்) என ரூ. 1.50 லட்சம் ஆகும். தொழில் துவங்க துவக்கத்தில் முதலீடு, கட்டமைப்பு மற்றும் உற்பத்திக்கு ரூ. 5 லட்சம் போதும்.

வருவாய்

15 சதவீதம் லாபத்திற்கேற்ப விலை நிர்ணயித்து தனியார் நிறுவனங்களுக்கு விற்பதால் மாதம் ரூ. 22,500 லாபம் கிடைக்கும். சில்லரை விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால்  லாபம் அதிகரிக்கும்.

சந்தை வாய்ப்பு 

அவசர, அத்தியாவசிய உணவு தயாரிப்புக்கு நூடுல்ஸ் தேவை அதிகமாகி வருகிறது.  மணம், சுவை, தரம் ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடித்தால்  தொடர்ந்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம். சில்லரை, மொத்த வியாபார பலசரக்கு கடைகள், டிபார்ட் மென்ட் ஸ்டோர்கள், பிராண்டட் நிறுவனங்கள் நூடுல்ஸ் வாங்கள் தயாராக இருக்கின்றன.

இது பல இணையத்தளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட பதிவு...
சிறு தொழில் 3: நூடுல்ஸ் தயாரிப்பு தொழில் விவரங்கள்

noodles thayarippu

Wednesday, 18 April 2018

பெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு


பெண்களுக்கு வருமான வாய்ப்பு




















சமீப காலமாக கிரிஸ்டல் நகைகளை அணிவதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உண்டு. செயின் பறிப்பு சம்பவங்களின் அதிகரிப்பு, அதிக விலை கொண்ட தங்க நகைகள் இவற்றால் நடுத்தர வர்க்க குடும்ப பெண்கள் தங்க நகைகளின் மீது ஆர்வம் காட்டுவதில்லை. தங்க நகையின் இடத்தை, கிரிஸ்டல் நகைகள் பெற்றுள்ளது.

கிரிஸ்டல் நகைகளின் விலை குறைவு. அதேவேளையில் பார்ப்பதற்கு ஆடம்பரமாக வும், அழகாகவும் காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் போன்றோர் மத்தியில் கிரிஸ்டல் நகைகள் பிரபலமடைந்து வருகின்றன.


இந்த கிரிஸ்டல் நகையை பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்து வருமானம் ஈட்டலாம். இத்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். விலை மிக குறைவாக இருப்பதால் பல பெண்கள் ஆர்வத்தோடு இந்நகையை வாங்குகின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவிகள் அவரவர் உடைக்கேற்ப மேட்சிங்காக அணிய, பல்வேறு வண்ணங்களில் கிரிஸ்டல் நகைகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். இத்தொழிலை செய்வதற்கு பெரியளவில் பயிற்சி எதுவும் தேவையில்லை.
ஒரு நபர் ஒரு நாளில் 8 மணி நேரத்தில் சிறிய அளவு கிரிஸ்டல் நகையை 50 எண்ணிக்கை வரை தயாரிக்க முடியும். நடுத்தர அளவு என்றால் 15, பெரிய அளவு என்றால் 20 எண்ணிக்கை வரை தயாரிக்க முடியும். சிறிய அளவு நகைக்கு ரூ.90 முதல் ரூ.110 வரை செலவாகும். நடுத்த அளவுக்கு ரூ.150 முதல் ரூ.160 வரையும், பெரிய அளவுக்கு ரூ.200ம் செலவாகும். சிறிய அளவிலான 50 கிரிஸ்டல் நகை கள் தயாரிக்க உற்பத்தி செலவு ரூ.5,500. நடுத்தர அளவு 15 நகை தயாரிக்க ரூ.2,600, பெரிய அளவு 20 நகை தயாரிக்க ரூ.4,000 தேவைப்படும். அனை த்து வகைகளையும் கலந்து தயாரிக்க சராசரியாக ரூ.5 ஆயிரம் போதும்.


ஒரு நாள் உற்பத்தியாகும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கிரிஸ்டல் நகைகளை குறைந்தபட்சம் 30 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்க முடியும். இதன் மூலம் ஒரு நாள் வருவாய் ரூ.6,500. இதில் லாபம் ரூ.1,500. இதை உழைப்பு கூலியாகவும் எடுத்து கொள்ளலாம். கூட்டாக சேர்ந்து தயாரித்தால் லாபம் இரு மடங்காக அதிகரிக்கும்.


ஒரு நாள் தயாரித்ததை விற்ற பின், அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு அடுத்த உற்பத்தியை தொடங்கலாம். இது வீட்டில் இருந்தவாறு தொழில் செய்பவர்களுக்கு பொருந்தும். விற்பனை அளவுக்குகேற்ப உற்பத்தியை அதிகரித்தால், வருவாய் கூடும்.
தயாரிப்பது எப்படி?


கிரிஸ்டல் நகை தயாரிப்பு என்பது தங்க, வெள்ளி நகைகளை போல் உருக்கி, தட்டி செய்வதல்ல. ரெடிமேடாக உள்ள பல வண்ண கிரிஸ்டல் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா, பால் ஆகியவற்றை சேர்த்து கோர்ப்பதுதான் கிரிஸ்டல் நகை.


முதலில் கிரிஸ்டல் வயர் கம்பியை கட் டரை கொண்டு தேவையான அளவுகளில் வெட்டி கொள்ள வேண்டும். 2 பேர் கூட்டாக செய்தால், முதலில் டாலரை கோர்த்து நடுவில் தொங்கவிட்டு, இரு முனைகளில் ஒரு பால், ஒரு சக்கரியா, ஒரு கிரிஸ்டல் கல் ஆகியவற்றை வரிசைப்படி கோர்க்க வேண்டும். அதே பாணியில் தொடர்ந்து கோர்த்து வர வேண்டும்.
இவ்வாறு இருபுறமும் கோர்த்து முடிக்கும் இடத்தில் கியர் லாக்கை கோர்த்து கட்டிங் பிளேயர் மூலம் முடிச்சு போட வேண்டும். இங்கு ஊக்கு, காந்தம் அல்லது ஸ்க்ரூ பொருத்தினால் கிரிஸ்டல் நகை ரெடி.
தேவையான பொருட்கள்:

இளம் மற்றும் அடர்த்தியான பல வண்ண கிரிஸ்டல் சிறியது முதல் பெரியது வரையில் 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ஆகிய எண்களில் கிடைக்கும். எண் 2 கிரிஸ்டல் 90 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.65.
எண் 4 ரூ.75, எண் 6 ரூ.95, எண் 8 முதல் 18 வரை ரூ.100. சக்கரியா 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.52, கோல்டு பால் 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.19. கியர் வயர், கோல்டு மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும்.

100 மீட்டர் கொண்ட ஒரு ரோல் ரூ.65. கியர் லாக் 100 எண்ணிக்கையுள்ள ஒரு பாக்கெட் ரூ.52. ஊக்கு ஒரு செட் ரூ.7, காந்த ஊக்கு ஒன்று ரூ.10, ஸ்க்ரூ செட் ரூ.7 முதல் ரூ.10. கட்டர், பிளேயர் ஆகியவை தலா ரூ.100. நகரங்களில் உள்ள பேன்சி ஸ்டோர்களில் இந்த பொருட்கள் கிடைக்கின்றன.

எனவே சுயதொழில் செய்ய நினைக்கும் பெண்கள் கிரிஸ்டல் நகையை வீட்டிலேயே செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். இந்த நகையை தயாரிப்பது குறித்த பயிற்சியை சில சுய தொழில் பயிற்சி நிறுவனகளும் வழங்குகின்றன.
இப்பயிற்சி மையங்களில் விதவிதமான டிசைன்களில் கிறிஸ்டல் நகைகளை செய்ய பயிற்சி தருகின்றன. வருமானம் ஈட்ட நினைக்கும் பெண்கள் இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று கிறிஸ்டல் நகை தயாரிப்பில் ஈடுபடலாம்